மனதை கவனித்தல்
மனதை கவனித்தல் என்றால் அதை ஆழ்ந்த அன்புடன் கவனிப்பது என்று அர்த்தம் மிகுந்த கண்ணியத்துடனும் மதிப்புடனும் கவனிக்க வேண்டும். அது கடவுள் உங்களுக்கு அளித்த வெகுமதி. சிந்தனையிலும் எதுவும் தவறாகிவிடவில்லை மற்றவற்றை போலவே அதுவும் ஒரு அழகான நடைமுறை கொண்டது. கற்பனைகளைஅதன் வெளிப்பாடுகளையும் கவனியுங்கள் அதில் சம்பந்தபடாமல் விலகி நில்லுங்கள் போக போக உணரத் தொடங்குவீர்கள். உங்கள் கவனிப்பு ஆழமாவது போல உங்கள் விழிப்பிணர்வும் ஆழப்படும் இடை வெளிகள் தோன்றும். ஒரு மேகத்துக்கும் இன்னொரு மேகத்துக்கும் இடையே உண்டாகும் இடைவெளி போல் ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்கும் இடைவெளி உண்டு. அந்த இடை வெளியில் மனமற்ற நிலை காணப்பெறுவீர்கள். மனமற்ற நிலையை அனுபவிப்பீரகள். மனமற்ற நிலை என்பது மனதுக்கு எதிரானதல்ல.மனதை அழிப்பதால் மனமற்ற நிலை வருவதில்லை.மனமற்ற நிலை மனதை புரிந்து கொள்வதால் வருவது……