பூச நட்சத்திர குணாதிசியங்கள்!!
பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம்
பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி
பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன்
பொதுவான குணங்கள் :
- எல்லாத் துறைகளிலும் ஞானம் உடையவர்கள்.
- தாய் தந்தையர் மீது அன்பு கொண்டவர்கள்.
- பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர்கள்.
- மனதில் இறைநம்பிக்கை உடையவர்கள்.
- பிறரிடம் அன்புடன் பழகக் கூடியவர்கள்.
- இன்னல்களை மறந்து புன்னகை யுடன் வாழக் கூடியவர்கள்.
- எடுத்த செயலை ஜெயத்தோடு முடிக்கக் கூடியவர்கள்.
- நண்பர்கள் மத்தியில் கீர்த்தியுடன் வாழ்வர்கள்.
பூசம் முதல் பாதம் :
இவர்களிடம் மேற்கூறிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- உடலில் நோய் உடையவர்கள்.
- இறை நம்பிக்கை உடையவர்கள்.
- பெருந்தன்மையான குணம் உடையவர்கள்.
- தர்ம உணர்வு உடையவர்கள்.
- தீர்க்க ஆயுள் உடையவர்கள்.
பூசம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் பூச நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- சுகபோக வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்கள்.
- விரும்பிய வாழ்க்கையை அடைய எதையும் செய்யக்கூடியவர்கள்.
- தவறுகளையும் நியாயப்படுத்துவார்கள்.
- எழிலான தோற்றம் கொண்டவர்கள்.
- முன் கோபம் கொண்டவர்கள்.
பூசம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் பூச நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- தீய சொற்களை பேசக்கூடியவர்கள்.
- தன்னைத் தானே கெடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
- மெதுவான போக்கை கொண்டவர்கள்.
- கர்வம் மற்றும் கோபம் கொண்டவர்கள்.
பூசம் நான்காம் பாதம் :
இவர்களிடம் பூச நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- அசட்டுதனமான நம்பிக்கை கொண்டவர்கள்.
- சொத்துகளை அழிப்பவர்கள்.
- எதற்கும் அஞ்சாதவர்கள்.
- இவர்கள் அறிவாளிகள். ஆனால் மந்தமான போக்கை கொண்டவர்கள்.
- எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்.
- நோய் உடையவர்கள்.