புதிய வீடு கட்டும்போது காம்பவுண்ட் சுவர் அவசியமா

புதிய வீடு கட்டும்போது காம்பவுண்ட் சுவர் அவசியமா?

புதிய வீடு கட்டுவதற்கு காம்பவுண்ட் போடுவது அவசியமே. ஏனெனில் காம்பவுண்ட் என்பது ஒரு வீட்டின் பாதுகாப்பு வேலி ஆகும். அது மட்டும்மின்றி காம்பவுண்டை அந்த வீட்டினுடைய தந்தை சுவர் என்றும் கூறுவர். நாம் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் போது பக்கத்து வீட்டினருடன் தொடர்பு கொண்டு பொதுக் காம்பவுண்ட் சுவர்களாக அமைக்க கூடாது. நம் காம்பவுண்ட் சுவர் பக்கது வீட்டின் போர், கிணறு , வாசல், தண்ணீர் தொட்டி,படி , போர்டிகோ அமைப்பு என அனைத்தும் தொடர்பு கொண்டது.

காம்பவுண்ட் சுவர் சரியாக இல்லாததால் ஏற்படும் விளைவுகள்:

  • குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.
  • உயிர் இழப்புகள் ஏற்படலாம்.
  • மேலும் திருமண தடைகள் ஏற்படும்.
  • கடன் பிரசனைகள் மற்றும் விபத்துக்கள் நிகலும்.

காம்பவுண்ட் சுவர் அமைக்கும் முறைகள்:

இந்த பெரிய பிரபஞ்சத்தில் நமது இடம் என்பது நாம் காம்பவுண்ட் அமைத்தால் மட்டுமே அது நமக்கு உரிமை ஆகும். அந்த இடம் மட்டுமே  நமக்கு வாஸ்து பேசும் .அது யாருடைய பெயரில் இருந்தாலும் பிரச்சனைகள் கிடையாது.

முதலில் பூமி பூஜை போட்டு அடுத்து பில்லர் போட்ட பிறகு அதை பேஸ் அளவில் நிறுத்த வேண்டும் . பின்னர் நான்கு மூலைகளிலும் காம்பவுண்ட் குரிய சுவரினை எழுப்ப வேண்டும். பிறகு அஸ்திவாரம் எடுத்து கருங்கல்களால் சுவரினை எழுப்ப வேண்டும் . பிறகு காம்பவுண்ட்கும் பேஸ் மட்டத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை மண்களால் நிரப்ப வேண்டும்.

முதலிலேயே காம்பவுண்ட் சுவரினை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. கருங்கல் மட்டதுடன் நிறுத்தினாலே போதுமானதாகும் . அஸ்திவாரம் மட்டும் போட்டாலே போதுமானதாகும். பிறகு சுவரினை எழுப்பிய பின்னர் மதிலை எழுப்பினால் போதும். இவ்வாரு அமைப்பதன் மூலமாக நமது வீடீனை பக்கத்து வீட்டின் பாதிப்புகளை தவிர்க்கலாம்.