பாலில் இவ்வளவு நன்மைகள் உண்டா

பாலில் இவ்வளவு நன்மைகள் உண்டா?

 

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப் படும் மஞ்சள் நிறப் பால் சீம்பால் எனப்படுகிறது. இப்பால் குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கின்றது. பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

 

பாலின் வேதியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல உப பொருட்கள் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், கட்டிபடச் செய்து தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்பு சத்து நிறைந்த வெண்ணெயும், பக்கப் பொருளாக நீர்த் தன்மையான மோரையும் பெறலாம்.

 

ஒரு லிட்டர் மாட்டுப்பாலில் முப்பது முதல் முப்பத்தியைந்து கிராம் புரதம் கலந்துள்ளது. பாலில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் குளோரின் அனைத்தும் கிடைக்கின்றன. பொதுவாக இவை அனைத்தும் பாலில் 5-40 mM அளவில் கலந்திருக்கின்றன. பாலில் உப்புக்கள் மற்றும் தாதுக்கள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி 12, சி, டி, கே ஆகிய வைட்டமின்களும், மின், தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின், ஃப்ளோட்ஸ் மற்றும் பேண்டோதெனிக் ஆகிய அமிலங்களும் பாலில் கலந்துள்ளன.

 

பாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.லாக்டோஸ், குளுக்கோஸ், காலக்டாஸ் மற்றும் பிற ஒலிகோசகரைடுகள் உள்ளன.