பணவரவு தடைபட காரணமான கட்டிட அமைப்புகள் !
மனித வாழ்க்கையில் அத்தியாவசியமான தேவைகளில் பணம் பிரதானமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்கு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50% மேல் செலவிடுகிறான். ஒரு சிலருக்கு நல்ல உத்தியோகம் அமைந்து கஷ்டம் எதுவும் இல்லாமல் வாழ்நாள் முழுக்க பணம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் சிலருக்கு கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே பணம் என்பது கிடைக்கிறது. இன்னும் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் என்பது பற்றாக்குறையாகவே இருக்கிறது. இவைகளுக்கு எல்லாம் காரணங்கள் தான் என்ன?
ஒருவர் குடியிருக்கும் வீடே இதுபோல வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறது என்று எனது அனுபவத்திலும், ஆராய்ச்சியிலும் கண்டுபிடித்துள்ளேன். இவர்களின் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கும்போது பணவரவில் எல்லோருக்குமே மாற்றம் ஏற்படுகிறது.
பணவரவு தடைபட மற்றும் பணவரவு பற்றாக்குறைக்கு காரணமான வீட்டின் அமைப்புகள் :
1. வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு.
2. வடக்கு பகுதியில் ஜன்னல் இருந்தும் திறந்து வைக்காத அமைப்புகள்.
3. வடக்கு பகுதியில் குறைவான இடைவெளியில் காம்பவுண்ட் அமைப்பு.
4. வடக்கு பகுதி மூடிய அமைப்பில் போர்டிக்கோ போட்டுக் கொள்வது.
5. வடக்கு பகுதியில் நமது வீட்டின் மிக அருகிலேயே பக்கத்து வீட்டின் மிக உயரமான கட்டிட அமைப்புகள் வருவது.
6. வடக்கு பகுதி முழுவதும் உயரமான மரங்கள் வருவது.
7. வடகிழக்கில் பூஜையறை வருவது.
8. வடகிழக்கில் கழிவறை வருவது.
9. வடகிழக்கில் மாடிப்படி அமைப்பு வருவது.
10. வடகிழக்கில் சிட்அவுட் வருவது.
11. வடக்கு சுவர் பொது சுவராக வருவது.
12. வடக்கு வாசல் என்பது வடமேற்கு பகுதியில் நீச்ச வாசலாக வருவது.
13. புதன் வாசல் என்கிற பெயரில் வடக்கு வாசலை வைத்து விட்டு நேரெதிர் தெற்கு பக்க வாசலை நீச்ச வாசலாக வைப்பது.
14. மொத்த வீட்டை வடக்கு முகமாக அமைத்துவிட்டு, வடகிழக்கில் ஒரு சிறிய சிட்அவுட்டை உருவாக்கி அதில் கிழக்கு வாசலாக வைத்துக் கொள்வது.
15. வடக்கு முழுவதும் மூடிய அமைப்பில் கார் செட் போட்டுக்கொள்வது.
16. குழி கணக்கு, ஆயாதி என்கிற பெயரில் மொத்த கட்டிடத்தையும் 'ட' 'ப" வடிவத்தில் உருவாக்கிக்கொள்வது.
பணவரவு தடையுள்ள வீடுகளிலும், பணவரவே இல்லாத வீடுகளிலும் நான் குறிப்பிட்ட இந்த அமைப்புகள் கண்டிப்பாக இருக்கக்கூடும்.
82205-44911