பக்கத்து வீட்டு அமைப்புகளால் நமக்கு ஏற்படும் நன்மை, தீமைகள்
பக்கத்து வீட்டு அமைப்புகள் நம்மை பாதிக்குமா?
என்னுடைய அனுபவத்தில் ஒருவருக்கு வாஸ்துபடி நல்ல வீடு அமைவது என்பது மிகவும் சவாலான விஷயம் என்று தான் கூறுவேன். அதற்கு காரணங்கள் பல, அதில் மிக மிக முக்கியமான ஒன்று பக்கத்து வீட்டமைப்புகள் நமக்கு எந்த வகையிலும் கெடுதல் ஏற்படுத்தாத வண்ணம் அமைவது.
பெரும்பாலும் நமது ஊரில் இயற்கையிலேயே மக்கள் நல்ல வீடுகளை கட்டி கொள்கிறார்கள். இருந்தபோதிலும் கஷ்டங்கள் தொடர்கிறது. காரணம், நாம் அங்கு சென்று பார்க்கும் போதுதான் தெரிகிறது பக்கத்து வீட்டமைப்பால், இவர்களுக்கு பிரச்சனை வருகிறது என்று.
உங்களுடைய வீட்டிற்கு நான்கு புறமும் காம்பவுண்ட் அவசியம். அதிலும் யாருடனும் கூட்டு இல்லாமல் தனி காம்பவுண்டாக இருப்பது சிறப்பு. கிழக்கு மற்றும் வடக்கு பகுதி காம்பவுண்டில் கூட்டு வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர் அந்த காம்பவுண்டை சேர்த்து வீடோ அல்லது ஏதாவது ஒரு கட்டிடங்களை கட்டினால், உங்களுடைய வீடு அன்றுமுதல் வடக்கு முழுவதும் மூடப்பட்ட வீடாக மாறி கோமா நிலைக்கு சென்றுவிடும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கட்டிடங்கள் வரும்போது அதனுடைய எடை முழுவதையும் நீங்கள் தான் சுமக்க நேரிடும். அதன்பிறகு எண்ணிலடங்கா துன்பங்கள் வரும்.
உங்களுடைய வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில் பக்கத்து வீட்டமைப்பில் கிணறு, போர், சம்ப், கழிவறை, கழிவறை குழி, மாடிபடி இதுபோல அமைப்புகள் வருமானால், பெண்களின் உடல்நலம் கெடுதல், கணவன் – மனைவி உறவில் பிரிவு, திருட்டு, தீ விபத்து, போலீஸ் கேஸ் என இன்னும் பல பல பிரச்சனைகள் வரக்கூடும்.
உங்களுடைய வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் பக்கத்து வீட்டமைப்பில், கிணறு, போர், சம்ப, கழிவறைகள், கழிவறைகுழிகள், சமையலறை, மாடிப்படி, குடோன்கள் வருமானால், உங்களுடைய வீட்டில் ஆண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தொழில், பொருளாதாரம், குடும்ப உறவுகள், ஆரோக்கியம், சுய கௌரவம், கணவன் – மனைவி பிரிந்து வாழ்தல், திருமணத்தடை, குழந்தையின்மை, காதல் திருமணங்கள், தற்கொலை எண்ணங்கள், கடன் வறுமை போன்றவை ஏற்படக்கூடும்.
உங்களுடைய வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் பக்கத்து வீட்டமைப்பில் கிணறு, போர், சம்ப் போன்ற அமைப்புகள் வருமானால், நீங்கள் நாணயம் இழக்க நேரிடும், குடும்பத்தில் அவப்பெயர் ஏற்படும். கையிருப்பு மற்றும் சொத்துக்களை இழக்க நேரிடும். சில நேரங்களில் சொத்துகள் ஏலம் போகக்கூட நேரிடும்.
வாஸ்துபடி வீட்டின் அமைப்பு நல்லபடியாக அமைவது என்பது அனுபவப்பட்ட வாஸ்து நிபுணரின் உதவி இருந்தால் மட்டுமே சாத்தியம். 82205-44911