நியூமராலஜியும்(எண்கணிதமும்) செயல்படும் விதமும்
நியூமராலஜி என்னும் எண்கணிதம்மானது மிகவும் விசித்திரமானது போன்றும்,புரிந்துகொள்ள கடினமானதாகவும் உள்ளதுபோல் தோன்றினாலும், இது மிகவும் எளிமையான அடிப்படைகளைக் கொண்டது.
ஒரு நபரின் ஆளுமைத்தன்மை,அவரின் குணநலன்கள் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளகூடிய வகையில் எண்கணிதம் விளங்குகிறது.
எல்லா எண்களும் 1 முதல் 9 வரையிலான ஒற்றை இலக்க எண்களாக குறைக்கபடுகின்றன.ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு தனிப்பட்ட குணாம்சத்துடன் தொடர்பு கொண்டவை.
எண்கணிதத்தில் உள்ள ஒவ்வொரு எண்களும் உடன் உள்ள எண்களோடுசேர்ந்து கூட்டி தனி தனி இலக்கங்களாக குறைக்கபடுகின்றன.
உதாரணமாக 14ஆம் எண்ணை 1+4 என கூட்டும் போது 5 ஆகா குறைக்கப்படுகிறது.அடுத்ததாக அதிக இலக்கங்களை கொண்ட பெரிய எண்கள் 195 என எடுத்து கொண்டு அதனை 1+9+5 ஐ சேர்ப்பதன் மூலம் 15 ஆகவும், மீண்டும் அதனை 1+5 என கூட்டும் போது 6 ஆகவும் குறைக்கபடுகின்றன.
ஒரு நபரின் பெயரில் உள்ள எழுத்துக்கள் எண்களை கொண்டே மேற்கூறியவாரே கணக்கிடப்படுகிறது.
மேற்சொன்ன எளிமையான கணிதசூத்திரம் மூலம் ஒரு எண்கணித நிபுணரால் ஒரு தனி நபரை பற்றிய பல குணாதிசயங்களை கணிக்க முடியும்.இந்த பண்புகளை ஆராய்ந்தே ஒரு நபரின் துல்லியமான கணக்குகளை கணக்கிடப்படுகிறது.
ஒரு தனி மனிதனின் வாழ்க்கைமுறை மற்றும் அவரின் குணாதிசயங்கள் ஆகியவை அவருடைய பிறந்ததேதியில் இருந்து ஒரு பாதியும் மறுபாதி அவரது பெயரில் இருந்துமே வருகின்றது.
இதனை அனுபவம் வாய்ந்த நியூமராலஜி(எண்கணித) ஆலோசகரிடம் சென்று உரையாடும் பொழுது, ஒரு தனி நபரை பற்றிய எண்களின் மதிப்பீடுகள் பற்றியும், அவர்களின் குணாதிசயங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள முடியும்.
“வாழ்க வளமுடன்”
தொடர்புக்கு— 9092768787/ 9159768787