தொழில் தொடங்குவதற்கான தேவைகள்

ஒரு தொழிலை நாம் தொடங்குவதற்கு முன், எந்த முறையில் அந்த தொழிலை நாம் பதிவு செய்ய நினைக்கின்றோம், எப்படி அந்தத் தொழிலை செயல்படுத்த
நினைக்கின்றோம் என்பது மிகவும் அவசியமாகும். அடிப்படையில் 3 விதமாக ஒரு தொழிலைத் தொடங்கலாம். அதை நிலைப்படுத்திய பின், வேறு
விதமாகவும் செய்யலாம். இப்போது தொழிலை தொடங்குவது பற்றி மற்றும் பார்ப்போம்.
 


1. தனியுடமை 

பண்புகள்
 

  • தனியார் துறை நிறுவனம்
  • வியாபாரத்தில் பங்காளர்கள் எவரும் காணப்பட மாட்டார்கள்.
  • பொறுப்பு வரையறையற்றது (unlimited liability). அஃது கடன் தொடர்பில் முழுப் பொறுப்பும் உரிமையாளரே சாரும். கம்பனிகள் (கும்பினிகள்),
    கூட்டு நிறுவனங்களுக்கு பொறுப்பு வரையறுக்கப்பட்டிருக்கும்.
  • முகாமை (மேலாண்மை) தொடர்பான தீர்மானங்களை உரிமையாளரே மேற்கொள்ளுவார்.
  • இலாப நட்டங்கள் உரிமையாளருக்கே போய் சேரும்.
  • சட்டக் கட்டுபாடுகள் குறைந்தது. இலகுவாக வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம்.
  • கணக்கீடுகள் செய்வது இலகுவானது

நன்மைகள்

சிறிய மூலதனத்துடன் இலகுவாக யாரும் ஆரம்பிக்கலாம். தகுதி, படிப்பு போன்றன அவசியமில்லை.

  • விரைவாகவும், சுதந்திரமாகவும் தீர்மானங்களை நிறைவேற்ற முடிதல்.
  • இலாபம் முழுவதும் உரிமையாளரைச் சேரும்.
  • வியாபாரத்தினை கட்டுப்படுத்துவது, வாடிக்கையாளரைப் பேணல் என்பது இலகு.
     

இடர்கள்

பெருமளவான மூலதனத்தை திரட்ட முடியாமை.

  • பெரிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முடியாமை.
  • பொறுப்புக்கள் வரையறுக்கப்படாமை. தொழில் (வியாபாரம்) முறிவடையுமாயின் உரிமையாளர் சொந்த சொத்துகளையும் இழக்க நேரிடும்
  • ஊழியர்களை திரட்டுவதில் பிரச்சனைகள் காணப்படும்.
  • வியாபாரம் நீண்ட காலம் நீடித்து இருப்பதில் நிச்சயமற்றதன்மை.
  • நிறுவனம் வளரவளர ஆபத்து(risks) அதிகரிக்கும். பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாற்றுவதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.
  • சட்டஆளுமை அற்றது.
  • உரிமையாளருக்கு ஏற்படும் பாதிப்பு தொழிலினை (வியாபாரத்தினை) பாதிக்கும்.
  • போதிய தொழில் நுணுக்க அறிவற்றோரால் வியாபாரம் பிழையாக நடத்திச் செல்லப்படலாம்.
     

2.  கூட்டுத்தொழில்

பண்புகள்

  • இலாபம், உழைப்பதை பிரதாண நோக்கமாகக் கொண்டு பொதுவான முயற்சியில் ஈடுபடக்கூடிய நபர்களுக்கிடையே ஏற்படுகின்ற ஒப்பந்தம் அல்லது
    உறுதி அல்லது உறவு பங்குடமை எனப்படும்.
  • இங்கு ஒப்பந்தம் என்பது பங்குடமை முயற்சியையும் நிர்வாகத்தையும் யார் நடத்துவது எப்படி நடத்துவது போன்ற பங்குடமை நடவடிக்கைகள்
    தொடர்பான விதிகளை உள்ளடக்கிய பங்காளர்களுக்கிடையே ஏற்படும் ஓர் உடன்படிக்கையாகும்.
  • இவ் ஒப்பந்தங்கள் வாய் மூலம் அல்லது எழுத்து மூலம் அல்லது நடத்தைகள் மூலம் அமையலாம்

நன்மைகள்

  • சிறிய மூலதனத்துடன் இலகுவாக யாரும் ஆரம்பிக்கலாம். தகுதி, படிப்பு போன்றன அவசியமில்லை.
  • விரைவாகவும், சுதந்திரமாகவும் சிறிய கலந்தாலோசனைக்குப் பின் தீர்மானங்களை நிறைவேற்ற முடிதல்.
  • இலாபம் முழுவதும் உரிமையாளர்களைச் சேரும்.
  • வியாபாரத்தினை கட்டுப்படுத்துவது, வாடிக்கையாளரைப் பேணல் என்பது இலகு.

இடர்கள்

  • ஒரு பங்காளர் தொழிலை விட்டு செல்வதானால்,ர்வாகத்தில் சுணக்கம்நி  ஏற்படலாம்
  • ஒரேமனதான முடிவை எடுப்பதற்கு சிரமம் ஏற்படலாம்.
  • யார் மிக அதிகமான உழைப்பை போட்டது போன்ற கேள்வி எழலாம்
  • ஒரு பங்காளரின் சுய  முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தலாம்

3. வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்

பெரும்பாலான வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் வகை பங்குகள் அடிப்படையில் அமைந்தவை. அந்நிறுவனங்கள்

வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்பதன் பொருளானது ஒரு நிறுவனத்தில் அதன் உறுப்பினர்கள் கொண்டுள்ள பங்குகளுக்கு ஈடான அளவு கடனுக்கே
அவர்கள் ஆளாவர். உதாரணத்திற்கு, நிறுவனம் ஒன்றில் திரு.தமிழ் அவர்களின் முழுமையாக செலுத்தப்பட்ட பங்கு ரூபாய் 10,000.00 எனில்,
பொதுவாக அதற்கும் மேலான சுமைகள் அந்நிறுவனத்தில் அவருக்கு இல்லை.

ஒரு நிறுவனத்தின் சட்ட விதிகளில் கீழ்க்காணும் விதிகள் இருந்தால் மட்டுமே ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் தோற்றுவிக்கப்பட
முடியும்:-

  • இயக்குநர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டுப் பங்குகளை மாற்றும் அனுமதியைக் கட்டுப்படுத்துதல்;
  • உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50க்கும் மேற்போகாமல் கட்டுப்படுத்துதல் (குறைந்தது 2 பொதுவான நபர்கள், ஆனால் மற்ற நிறுவனம் அனுமதிக்கப்பட்ட
    100% பங்குகளுடன் உரிமை கொள்ளல்);
  • நிறுவனத்தில் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களை பொதுமக்கள் வாங்குவதற்கான அழைப்புகளைத் தடை செய்தல்;
  • நிறுவனத்தில் பொது மக்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பணம் வைப்புத் தொகையாக அல்லது செலுத்தப்படுவதற்கு வட்டியோடோ வட்டியில்லாமலோ
    வழங்க தடை செய்தல்;


நன்மைகள்

மிகவும் வெளிப்படையான நன்மை அதன் பங்குதாரர்களின் சுமைகள் ‘பாதுகாத்தல்’, அவர்கள் வாங்கிய பங்கு மூலதன அளவிற்கே அவர்களின் சுமை
கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களின் பங்கு அளவிற்கு மிஞ்சிய கடன்களுக்கு அவர்கள் பொறுப்பாகமாட்டார்கள். ஆனால், மோசடி அல்லது
முறைகேடு இல்லா நிலையினை உறுதிப்படுத்திடல் வேண்டும்.

எளிமையான முறையில் பங்குகளை மாற்றவோ புதிய முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அங்கீகரித்தலோ மேலும் ஒரு நன்மையாகும். நடப்பு உறுப்பினர்கள்
தங்கள் பங்குரிமையை முழுமையாகவோ பகுதியாகவோ விற்க முடியும் (இயக்குநர்களின் அங்கீகாரத்திற்குட்பட்டு). ஒரே உரிமைத்துவம் அல்லது
கூட்டாண்மை போலல்லாமல் நிறுவனத்தை மீள்உருவாக்கம் செய்யத்தேவையில்லை, பங்குதாரர் அல்லது இயக்குநர் இறந்தாலும் கூட.

 


பாதகங்கள்


(Disadvantages)

  • நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் பொது மக்களால் அறியப்படும்.
  • நிதி அறிக்கையில் வருடாந்திர கணக்கறிக்கையை நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சட்ட ரீதியாக சமர்ப்பிப்பதற்கும் பெறுவதற்கும் மேலும் இயக்குநர் வாரிய மற்றும் பங்குதாரர் கூட்டங்களில் குறிப்பு எடுப்பதற்குத்
    குறைந்த பட்சம் நிறுவனச் செயலாளர் ஒருவர் தேவை.
  • தோற்றுவாய்ச் செலவு அதிகம்- கணக்காய்வு, கணக்கியல், நிறுவனச் செயலாக்கம் மற்றும் வரிக் கட்டணங்கள் போன்ற வருடாந்திரச் செலவுகள்.

பாதகங்கள் இருப்பின் ஏன் இன்னும் அதிகமான வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் தோற்றம் காண்கின்றன?

வணிகம் வளரும் போது, வருமானமும் வணிக எண்ணிக்கையும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள்
அதிக கடனும் கடன் செலுத்த அதிக காலமும் கேட்பர், எனவே
கடன் இடர்கள் அதிகரிக்கும்
.   அதன் விளைவாக, நிறுவனம் விநியோகிப்பாளர்களிடமும் வங்கிகளிடமும் தங்கள் கடன் வசதிகளை விரிவாக்கக் கோருவர்,
அதாவது அதிகமான கடன் சுமைகள்.

பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட
வரம்புக்குட்பட்ட சுமைகள் ‘பாதுகாப்பு’ மேற்கூறிய செயல்முறை மற்றும் நிதி பாதங்களைத் தெளிவாகக் கடந்து விடச் செய்கிறது.