தென்கிழக்கு மூலையின் சிறப்புகள்
தொடர்ச்சி….
- மனையின் வடக்கு மற்றும் கிழக்குத் திசைகளில் மலக்குழி, சாண எரிவாயுக்குழி, நிலத்தடி தான்யக் கிடங்குகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற அமைப்புகள் வருவது சிறப்பு.மேலும் வாயில்களுக்கு நேர் எதிரில் இருத்தல் கூடாது.
- மேல் நிலைத்தொட்டியானது மனை அல்லது கட்டிடத்தின் தென்மேற்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும். வடகிழக்கு மூலையில் அமைப்பதை தவிர்க்கவும்.
- மரங்கள் மனையின் தென்மேற்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும். செடிகள் மனையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும்.
- வடகிழக்கு பகுதியில் செடிகள் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது. மனையின் தென்கிழக்கு பகுதியில் சிவப்பு மலர் தரும் செடிகளும், வடக்கில் மஞ்சள் மலர் தரும் செடிகளும் வளர்க்க கூடாது.
- மனையின் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியிலும், மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியிலும் காலியிடம் அதிகமாக இருக்குமாறு கட்டிடம் கட்ட வேண்டும்.
- மனையின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு பகுதிகள் தவிர வேறு எங்கும் பள்ளங்கள் இருத்தல் கூடாது.
- மனையின் தென்மேற்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் தவிர வேறு எங்கும் மேடுகளும், பாரங்களும் இருத்தல் கூடாது. குப்பையும் கொட்டக் கூடாது.
- மனையின் வடகிழக்கு, தென்கிழக்கு , வடமேற்கு மூலைகள் மூடப்படக் கூடாது. தென்மேற்கு மூலை மூடப்படலாம். ஆனால் அப்பகுதியை ஒட்டிப் பக்கத்து மனையில் கிணறோ, ஆழ்துளைக் கிணறோ, நிலத்தடி நீர்த்தொட்டியோ, கட்டிடமோ கூடாது.
- எந்தத் திசையிலும் கட்டிடத்தில் வெட்டோ, வளர்ச்சியோ இருத்தல் கூடாது.
- தலைவாயில் கிழக்கு வடகிழக்கு , தெற்கு அக்னி ஆகிய உச்சப் பகுதிகளிலேயே அமைத்தல் வேண்டும். 82205-44911