துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்?

 

ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை பொருந்தியிருகின்றதோ அதற்கேற்ப அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது.

முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், எனது சொந்த லக்கனப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்? என்று கேட்பவர்களுக்காக நான் லக்கன அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு.

 

சுக்கிரனை லக்கன அதிபதியாகவும், சந்திரனை பத்தாம் அதிபதியாகவும் கொண்ட துலாம் லக்கன அன்பர்களுக்கு,

 

  1. தங்கம், வெள்ளி , வெண்கலம் போன்ற உலோகங்கள் சம்மந்தமான தொழில்கள்,
  2. ஆடைகள் (விற்பது, தைப்பது போன்றவை),
  3. மணல் லோடு எடுப்பது,
  4. கண்ணாடி சம்மந்தமான தொழில்கள்,
  5. கோயில் வாசலில் பூ, பழம் போன்ற கடைகள் வைத்தல்,
  6. பூ வியாபாரம்,
  7. வாசனை வியாபாரம்,
  8. பலகார கடை ,
  9. கட்டில் – மெத்தை வியாபாரம்,
  10. கால் நடை பண்ணை ,
  11. கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் அல்லது கேளிக்கையின் மூலம் சம்பாதித்தல்,
  12. முத்து, உப்பு வியாபாரம்,
  13. டிராவல் வியாபாரங்கள்,
  14. தண்ணீர் மூலமாக பயன்பெறும் தொழில்கள் (வேளாண் தொழில், நீர் பாசன துறை)
  15. பான்சி கடைகள் வைத்தல்,
  16. நடிகர்கள், எழுத்தாளர், பாடல் ஆசிரியர்,
  17. பால், தயிர், மோர் வியாபாரங்கள்,
  18. வெள்ளை பொருள்கள் உற்பத்தி துறை ,
  19. சுண்ணாம்பு வியாபாரம்,
  20. தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள்,
  21. சீட்டுப் பிடித்தல்,
  22. மருத்துவர்,
  23. பேச்சாளர் போன்றவற்றில் ஏதாவது ஒரு தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்.