திருமணத்தடை ஏற்படுவதற்கு வாஸ்து குறையுள்ள வீடு காரணமா?
முன்னோர் உரைத்த மொழி
"வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்" என்பார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் நீங்கள் முதலில் கட்டக்கூடிய வீடே உங்களது வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கிறது. உறவுகளில் திருமணம், காதல் திருமணம், வெளி (தூரத்தில்), சொந்தத்தில் திருமணம் போன்றவைகளைத் தீர்மானிப்பதும் நீங்கள் கட்டிய புது வீடே.
வீட்டில் உள்ள குறை
அதேபோல் திருமணமாகாத பல பேரின் வீட்டைப் பார்த்ததில் அவர்கள் அனைவரும் ஒரே தவறு உள்ள வீட்டிலேயே வசித்து வருகிறார்கள் அந்தத் தவறுகளை அவர்கள் அறியாமல் செய்து வருகின்றனர். அந்த வீட்டில் உள்ளத் தவறைத் தகுந்த வாஸ்து நிபுணர்களின் உதவியால் அலசி ஆராய்ந்து தீர்க்கும் பட்சத்தில் திருமணத்தடை என்பது எவருக்குமே ஏற்படாது.
கிழக்கின் மகிமை
நீங்கள் குடியிருக்கும் வீட்டில் கிழக்குப் பகுதி முழுவதும் திறந்த இடைவெளி உள்ளதா? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். குறைந்தபட்சம் ஜன்னல்களாவது இருக்கிறதா…? என்று பாருங்கள். கிழக்குப் பகுதி அடைபட்டால் திருமணத்தடை என்பது வர வாய்ப்புகள் அதிகம். அதை சரி செய்தாலே உங்களுடைய திருமணம் உடனடியாக கைகூடும். இது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை. 82205-44911