தலைவாசல் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் எங்கு வைத்தால் நன்மை எங்கு வைத்தால் தீமை?
வடக்கு வாசல் :
தலை வாசல் நம்முடைய வீட்டிற்கு வடக்கு வாசல் என்பது வடக்கு பகுதியில் கிழக்கு சார்ந்து வருவதே சிறப்பு. நடுபகுதியிலோ அல்லது மேற்கு பகுதியிலோ வருவது தவறு. கிழக்கு சார்ந்து வரும்போது பலபல எண்ணிலடங்கா நன்மைகள் ஏற்படும். அந்த வீடு நல்ல சுபிக்ஷமான நிலையிலே இருக்கும். நடுபகுதியியோ அல்லது மேற்கு சார்ந்தோ வாசல்படி வரும் பட்சத்தில் அதனுடைய கெட்டபலன்கள் அதே வீட்டில் வசிக்கும் ஆண்கள் மீதே இருக்கும்.
1. நிலையான வருமானம் இருக்காது.
2. குடும்ப சொந்தங்கள் விட்டு விலகும் நிலை ஏற்படும்.
3. தந்தை மகன்/மகள் உறவுகளில் பாதிப்பு ஏற்படும்.
4. மனநிலையில் பாதிப்புகள் ஏற்படும்.
5. போதை போன்றவைகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
6.நிரந்தர வேலை இல்லாத நிலைமை
7.கடன் சுமை ஏற்படும்
8 .தொழில் நஷ்டம் எற்படும்.
கிழக்குவாசல் :
தலை வாசல் நம்முடைய வீட்டிற்கு கிழக்கு வாசல் என்பது கிழக்கு பகுதியில் வடக்கு சார்ந்து வருவதே சிறப்பு. இதனால் பலபல நன்மைகள் இயற்கையிலேயே அந்த வீட்டிற்கு ஏற்படும். தலை வாசல் நடுப்பகுதியில் வருவதும் தெற்கு சார்ந்து வருவதும் இரண்டுமே தவறு. இதனால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் மீதே கெடுதலான பலன்கள் ஏற்படும்.
1. ஆரோக்கிய குறைவு அதாவது நோய்வாய்ப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
2. கண்பார்வை பாதிப்பு ஏற்படும்.
3. ஆண்களின் ஆதிக்கம் பாதிக்கப்படும்.
4. சாமியாடுபவர்கள்இ குறிசொல்லுபவர்களாக இருப்பார்கள்.
5. மனநிலை பாதிப்பை கூட உருவாக்கக் கூடியது.
6.கனவண் மனைவி உறவில் விரிசல்
7. திருமணத்தடை ஏற்படும்
8 திருட்டு தீ விபத்து ஏற்படும்
ஒவ்வொரு வீட்டிற்கும் தலைவாசல் என்பது ரோடு அமைப்புக்கும் திசைக்காட்டிக்கும் ஏற்ப மாறுபடும். சரியான வாஸ்து நிபுணரின் ஆலோசணைக்கு பிறகுதான் நன்மைகள் தீமைகள் பற்றி தீர்மானிக்க முடியும். வாஸ்து சாஸ்த்திரத்திலேயே தலைவாசல் தான் வீட்டின் “உயிர்"