தரமான மனைப்பிரிவில் அங்கம் வகிக்கும் வாஸ்து – ஒன்றாம் தரம்

தரமான மனைப்பிரிவில் அங்கம் வகிக்கும் வாஸ்து – ஒன்றாம் தரம்

 

இன்று நகர்புறங்கள் ஆனாலும் சரி, கிராமப்புறங்கள் ஆனாலும் சரி, மனையை பிரித்து விற்பவர்களிடம் கேட்டோம் என்றால் பெரும்பாலும், வடக்கு அல்லது கிழக்கு பார்த்த மனை வாங்குபவர்களே அதிகம் என்பர். ஆனால், அவர்களுக்கு அது முதல் தரமான மனையா? அல்லது இரண்டாம் தரமான மனையா? என்று எதுவும் தெரியாது. அதை எவ்வாறு முடிவு செய்வது என்பதை இப்பகுதியில் காண்போம்.

 

முதல் தரமான மனை

முதல் தரமான மனை என்றால், அதற்கு சில சிறப்பம்சங்கள் கொண்ட மனையைத் தேர்ந்தெடுத்து வீடு கட்டினால் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முதல் தரமான மனைக்கு கிழக்கிலும், வடக்கிலும்  தெருக்கள் இருக்க வேண்டும். அந்த தெருக்கள் மனைக்கு வடகிழக்கு கிழக்கிலோ அல்லது வடகிழக்கு வடக்கிலோ தெருக்குத்து அமையும்படி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த மனையை வாங்குவது சிறப்பு.

 

சிறப்பம்சம்

மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் மனைக்கு, மேற்கும், தெற்கும், உயர்ந்து இருக்க வேண்டும். அதாவது, மலைகள், உயரமான கட்டிடங்கள் போன்றவை அதுபோல, மனைக்கு கிழக்கும், வடக்கும், தாழ்ந்து இருக்க வேண்டும். அதாவது கிணறு, குளம் போன்றவை. மனையின் வடக்கு மற்றும் கிழக்குச் சாலை மனையை விட தாழ்வாக இருந்தால் மிக நன்று .

 

ஆலோசனை

இதுவே முதல் தரமான மனையின் சிறப்பம்சங்கள். எவ்வளவு தான் படித்து தெரிந்து கொண்டாலும் ஒரு மனையை வாங்கும் முன்பு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணர் ஆலோசனை பெற்று வாங்குவது நல்லது. ஏனெனில் மனையை வாங்கும் போது, அது சரியான திசையைத்தான் பார்க்கிறதா? மனையைச் சுற்றி என்னவெல்லாம் இருக்கிறது? தெருக்குத்து சரிதானா? போன்ற பல அம்சங்களையும் சரிபார்த்தே மனையை வாங்க வேண்டும். மனை சரியாக அமையாவிட்டால், அதில் எவ்வளவு சரியான வாஸ்து முறைப்படி வீடு கட்டினாலும், நற்பலன்களைத் தராது.

 

மனைத் தேர்வு

எனவே வாஸ்து என்பது எல்லா கடவுள்களையும் வணங்குவதற்கு முன்பு முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்குவதற்கு இணையானது. "முதல் கோணல் முற்றும் கோணல்" என்ற பழமொழிக்கு ஏற்ப  மனைத் தேர்வு தவறாக அமைந்துவிட்டால், பின்பு எல்லாமே தவறாக அமைய வாய்ப்புகள் அதிகம்.P.M.K-82205 44911