தனுசு, மீன லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்

தனுசு, மீன லக்னத்தில் பிறந்தவர்கள்  பொதுவாக என்ன தொழில் செய்யலாம்?

முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், எனது சொந்த லக்னப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்? என்று கேட்பவர்களுக்காக நான் லக்ன அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு…

 

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு மற்றும் மீன லக்ன அன்பர்களே நீங்கள்

ஆன்மீகத் துறை ,

நகை, ரத்தினக் கற்கள் வியாபாரம்,

மஞ்சள் பொருள்கள் வியாபாரம்,(எலுமிச்சை, மஞ்சள், வெல்லம் போன்றவை),

குருவாக இருத்தல்,

குறி சொல்லுதல்,

ஆலய துறைகள்,

தெய்வ சிற்பத்தை வடித்தல்,

காசாளர்கள்,

வக்கீல் தொழில்,

நிர்வாகத் துறை,

மளிகைக் கடை ,

தொழிலாளர் தலைவர்கள்,

கல்வித் துறை ,

புத்தக விற்பனை (stationary shop) என மேற்கண்ட தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள். எந்த விதத்திலும் பழைய பொருள்களை (second hand goods) வாங்கி விற்றல் இவர்களுக்கு லாபம் தராது.