ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சித் துவையல்
தேவையான பொருள்கள்:
கடலைப் பருப்பு – 4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
இஞ்சி – ½ கப்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
வெல்லம் – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தனியா – 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்
செய்முறை:
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடலைப் பருப்பு, தனியா, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு வறுத்து ஆறவிடவும்.
பின்னர் மேற்கண்டவற்றுடன் துருவிய தேங்காய், புளி, வெல்லம், உப்பு ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றித் துவையலாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் ஆகிய இவை இரண்டையும் சேர்த்து தாளித்து அவற்றைத் துவையலில் சேர்க்கவும்.
இதோ இப்போது சுவையான இஞ்சித் துவையல் தயார்.
இதனை சாதத்துடன் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
அத்துடன் இது அஜீரணத்தை போக்கும்.
இஞ்சி உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும்.
குறிப்பு:
துவையலை நீண்ட நேரம் வைத்திருக்கும்போது தேங்காயை நன்கு வதக்கி அரைக்கவும். சீக்கிரம் கெடாது.