சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
கொத்தமல்லி – 1 கட்டு
மிளகாய் வற்றல் – 4
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
உப்பு,எண்ணைய் – தேவையானது
வெங்காயம் – 1
முந்திரிபருப்பு – 10
நிலக்கடலை – 1/4 கப்
பாதாம் – 1/4 கப்
நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கொத்தமல்லித் தழையை நன்றாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றையும் எண்ணையில் வறுத்து வதக்கிய கொத்தமல்லித் தழையுடன்
உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியுடன் அரைத்த விழுதை நன்றாகக் கலந்து அப்படியே குக்கரில் வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.
முந்திரிபருப்பு,நிலக்கடலை,பாதாம் மூன்றையும் நெய்யில் வறுக்கவும்.
குக்கரில் இருந்து கொத்தமல்லி பாத்தை எடுத்து வதக்கிய வெங்காயம்,வறுத்த பருப்புகள் சேர்த்து கிளறவும்.