சுவையான கத்திரிக்காய் பொரியல்

சுவையான கத்திரிக்காய் பொரியல்

தேவையானபொருள்கள் :

கத்தரிக்காய் – 1/4 கிலோ

தக்காளி – 1

மிளகாய்த் தூள் – 1/4 ஸ்பூன்

சாம்பார் பொடி – 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு     

தாளிக்க :

எண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

கறிவேப்பிலை – தேவையான அளவு     

மல்லித் தழை – தேவையான அளவு     

 

செய்முறை :

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். கத்தரிக்காயையும் சிறிய  துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.          

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் கத்தரிக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை சிம்மில் வைத்து காய் நன்கு வேகும் வரை வதக்கவும்.

காய் வெந்ததும் சாம்பார் பொடி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறுதியில் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். கத்திரிக்காய் பொரியல் ரெடி. இது சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.