சிவப்பழகு பெற முல்தானி மெட்டி …
முல்தானி மெட்டியில் மக்னீசியம் குளோரைடு நிறைந்திருப்பதால், இவை சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது. முல்தானி மெட்டி எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்ற என்பதால், பலரும் முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள பேஸ் பேக்குகள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை.
முல்தானி மெட்டி நன்றாக எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதை அனைத்து விதமான சருமத்தினரும் பயன்படுத்தலாம். கோடை காலத்தில் ஏற்படும் சரும கருமையை நீங்க பெரிதும் உதவுகிறது.
எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் ரோஜா நீர் சேர்த்து பேஸ் பேக் போட்டால் மென்மையான எண்ணெய் இல்லாத முகத்தை பெறலாம்.
உலர்ந்த மற்றும் தடிமனான தோல் உடையவர்கள் முல்தானி மெட்டியுடன் பாதாம் பேஸ்ட் மற்றும் பால் கலந்து பேஸ் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பொலிவடைவதை காணலாம். மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
வெயிலில் சுற்றி கருமையடைந்த சருமத்தை சரிசெய்ய, முல்தானி மெட்டி பொடியுடன் இளநீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சரும கருமை நீங்கும்.