சாப்பிடும் பொருட்களை கனவில் கண்டால் நடக்கும் பலன்கள்

சாப்பிடும் பொருட்களை கனவில் கண்டால் நடக்கும் பலன்கள்..!

 

  1. காப்பி சாப்பிடுவது போலக் கனவு கண்டால் சுபச் செய்திகள் தேடி வரும்.
  2. ஜாம் சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வீட்டில் நல்ல காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
  3. உப்பைக் கனவில் கண்டால் பணம், பொருள் கூடும்.
  4. கோதுமை, அரிசி இவைகளைக் கனவில் கண்டால் செல்வம் வந்து சேரும்.
  5. கோழி முட்டையைக் கனவில் கண்டால் தொழில், வியாபாரம் சிறந்து விளங்கும்.
  6. பசியால் வருந்துவது போலக் கனவு கண்டால் வறுமை வரலாம். செல்வங்கள் கூட கரையலாம்.
  7. வெல்லத்தைத் திண்பதாகக் கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
  8. தயிர் குடிப்பதாகக் கனவு கண்டால் எல்லா வகையிலும் நல்லது. லஷ்மி கடாக்ஷம் உண்டு.
  9. சூடான பொருட்களை உண்பது போலக் கனவு கண்டால் வெகு நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  10. ரொட்டியைத் திண்பது போலக் கனவு கண்டால் வறுமை வந்து சேரும்.
  11. புளிப்பான பண்டங்களை உண்பது போலக் கனவு கண்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும்.
  12. பருப்பை எந்த ரூபத்தில் கண்டாலும் பகைவர்கள் விலகுவார்கள்.
  13. பட்டாணியைக் கனவில் கண்டால் மங்கள காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.
  14. இறந்த மீன் அல்லது கருவாட்டைக் கனவில் கண்டால் பகைவர்களின் தொல்லை ஏற்படும்.