சமையலறை அமைக்கும் திசைகளும் அதற்குரிய பலன்களும்
வீட்டின் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே சாலச் சிறந்தது. நல்ல காற்றோட்டமும் , வெளிச்சமும் கிடைக்கும். வடமேற்கு மூலை இரண்டாவது வாய்ப்பு. தென்மேற்கு மூலையில் சமையலறை கூடாது. வடகிழக்கு மூலையில் சமையலறை அமைத்தல் கூடவே கூடாது.
தென்கிழக்கு :
இந்த பகுதியில் சமையலறை வருவது மிகவும் சிறப்பு. உடல் நலம், சுகம், மனநிம்மதி மகிழ்ச்சி பெருகும். உணவுக்குக் குறை வராது. செல்வம் பெருகும்.
தெற்கு :
தெற்கு பகுதியில் சமையலறை வருவதை தவிர்க்கவும். அவ்வாறு அமைக்கும் போது வறுமையை வலிய வர வழைக்கும். மன உழைச்சல், பெருகும். நிம்மதி கெடும்.
தென்மேற்கு :
கூடாது. உணவில் நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு தீராத நோய்கள் பெருகும். உடல் நலனும், நிம்மதியும், நட்பும்,உறவும் கெடும்.பகை தரும்.
மேற்கு :
தவிர்க்கவும். குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். நிம்மதி கெடும்.
வடமேற்கு :
வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும் போது விருந்தினர் வருகை அதிகரிக்கும். செலவுகள் பெருகினாலும் கெடுதல் விளையாது. உணவு விடுதிகளுக்கு மிகவும் ஏற்றது.
வடக்கு
வீட்டின் வடக்கு பகுதியில் சமையலறை அமைப்பதை தவிர்க்கவும். அமைக்கும் பட்சத்தில் குடும்பத்தில் சண்டை , சச்சரவுகள் உண்டாகும்.
வடகிழக்கு :
கூடவே கூடாது. செலவுகள் மிகவும் பெருகிச் செல்வம் அழியாம் வறுமை சேரும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். உடல் நலம் கெடும். விபத்தும் நடக்கும். மன நிம்மதி குன்றும். குடும்ப வாழ்வு நரகமாகும். ஆண்களைப் பயனற்றுப் போகச் செய்யும். ஆண் குழந்தைகளுக்குக் கடும் பிரச்சனைகள் வரும். ஆண்களுக்குப் புற்று நோயும், அகால மரணமும் நேரும். பெண்களை மலடாக்கும். கருச்சிதைவும் ஏற்படும். ஆண் குழந்தைகள் பெறும் வாய்ப்பு அரிதாகும்.
கிழக்கு :
தவிர்க்கவும். குடும்பத்தலைவியின் உடல் நலனும், மகிழ்வும், நிம்மதியும் கெடும்.
சமையலறைக்கு நேர் எதிரிலோ, மாடியில் மேலேயோ, குளியலறையோ, கழிப்பறையோ கூடாது.
சமையலறையின் உச்சப் பகுதியில் கதவு அமைக்க வேண்டும் அடுப்புக்கு நேர் எதிரில் கதவு இருத்தல் கூடாது.
அடுப்புக்கு நேர் எதிரில் வழிபாட்டு அறைக் கதவும் இருத்தல் கூடாது.