சனியின் காரகம் என்பது?
எய் இரும்புஆயுள் காரகன் என்று அழைக்கப்படும் சனியின் காரக விபரங்களைக் காண்போம். வேலையாட்கள், கீழ்மக்கள், கெட்டவர்கள், இரவில் பிறந்த ஜாதகருக்கு பிதுர் (தந்தை) காரகர், தாழ்ந்த குலம், வேட்டையாடும் மக்கள், படகோட்டி, வணிகர்,முதியவர், ஏழை, மலைவாசி, விதவைகள், நீலம், எண்ணெய், துவர்ப்பு,கருப்பு நிறம், கந்தல் துணி, 8ம் எண், சனிக்கிழமை, மேற்குதிசை, கூலி, அடிமைத்தொழில், சூது, மாமிசம், பயிர்கள், கட்டிடம், எந்திரம், கணினி, கடன்கள், கழுதை, எருமை, ஒட்டகம், உலைக்கூடம், நரம்புகள், சிறை, முடவன் (ஊனமுற்றோர்), ஆயுள் , தரித்திரம், நீசமான பெண், துன்புறுத்தல், வதைத்தல், அவமானம், பழி, பாவம், துக்கம், மேக நோய், வஞ்சனை, பைத்தியம், வாதம், பித்தம், மலடு, விபத்தால் மரணம் ஏற்படுதல் ஆகிய நிலைகளுக்கு சனியே காரகர் ஆவார்.