சந்திர கிரகணம் : 2018

 சந்திர கிரகணம் : 2018

* சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வருவது  சந்திர கிரகணம் எனப்படும். ( சந்திரன் மறைக்கப்படுவது சந்திரகிரகணம் )

*  2018 தைப்பூசத் திருநாளன்று சந்திர கிரகணம்

*  31.1.2018 புதன் கிழமை

*  ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை மாக பகுள பெளர்ணமி பூசம் நக்ஷத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் இராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகம் ஆரம்பம் ஆகி முடிவடைகிறது.

*  சந்திர கிரகணம் ஆரம்ப காலம் பாதாளத்தில் 5.16 க்கு

*  மத்திய காலம் இரவு மணி 6.58 க்கு

*  சந்திர கிரகண முடிவு காலம் இரவு 8.40 க்கு

*  கிரகணத்தின்போது சூரியன், சந்திரனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் பூமிக்கு வருவது தடை படுகின்றன. 

*  இந்து சமயத்தில் இது உகந்த காலமாக கருதப் படாததால் இந்து ஆலயங்கள் அந்த நேரத்தில் மூடப்பட்டு இருக்கும்.

சாந்தி செய்ய வேண்டியவர்கள் : 

*  புதன் கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். 

*  அதே போல, புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

உணவு உண்ணும் நேரம் :

*  காலை முதல் மாலை வரையில் போஜனம் செய்யக்கூடாது. 

*  சிரார்த்தம் மறுநாள் பெளர்ணமி திதியில் செய்ய வேண்டும்.

*  தர்ப்பணம் : மாலை 5.16 க்கு ஸ்நானம், மாலை இரவு மணி 6.58 க்கு தர்ப்பணம். 

*  இரவு மணி 8.40 க்கு ஸ்நானம் செய்ய வேண்டும். 

*  கர்ப்பம் அடைந்த பெண்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.50 வரையில் சந்திரனை பார்க்கக் கூடாது. 

*  இரவு 9.00 மணிக்கு மேல் சந்திர தரிசனம் செய்யலாம்.

*  கிரஹணம் விட்ட பின்னர் ஆலயம், வீடு சுத்தப்படுத்தும் நேரம் : 31.1.2018 புதன் கிழமை இரவு மணி 9.40 க்கு ஆலயம் வீடு சுத்தப் படுத்தி ஸ்நானம் செய்து அவரவர் சம்பிரதாயப்படி பூஜை செய்து கொள்ள வேண்டும்.

சந்திர கிரகணம் அன்று செய்யக் கூடாதவை?

*  கர்ப்பிணி பெண்கள் கிரஹணம் முடியும் வரை நிலாவை பார்ப்பது கூடாது. 

*  அதன் பிறகு அதிகாலையில் நீராடி விட்டு சந்திர தரிசனம் செய்யலாம்.

*  சந்திர கிரகணம் தொடங்குவதற்கும் 2 மணி நேரத்திற்கு முன் எவ்வித உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

*  சந்திர கிரகணத்தின் போது, கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

*  கிரகண நேரத்தில் ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தரிசனங்கள் செய்யக் கூடாது.

*  சமைத்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

*  கிரகணத்தின் போது நவக்கிரக துதி மற்றும் சந்திர கிரகணத்திற்கான துதிகளை பாராயணம் செய்யலாம்.

*  கிரகணம் முழுவதும் முடிந்த பின் ஸ்நானம் செய்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

*  ஆலய தரிசனம் செய்து விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

*  கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. 

*  ஆலய தரிசனம் மேற்கொண்ட பின்பே உணவு சாப்பிட வேண்டும்.

*  சந்திரக் கிரகண காலத்தில் வீட்டில் இருந்தவாறு இறைவனை துதித்து இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

*  சந்திரக் கிரகணம் முடிந்ததும் ஆலய வழிபாடு செய்தால், அதிக சிறப்பு பலன்களை பெறலாம்.

*  உளுந்து தானம் செய்வது நன்மையளிக்கும்.