குளியலறை மற்றும் கழிவறை அமைக்கும் திசைகள்

குளியலறை மற்றும் கழிவறை அமைக்கும் திசைகள்

1. தென்கிழக்கு

கிழக்கு மதிலை தொடாமல் அமைக்கும் போது நற்பலன்கள் தரும்.

2. தெற்கு

தெற்கு பகுதியில் கழிப்பறை வருவதை தவிர்க்கவும். தனிக்குளியலறை அமைக்க நற்பலன்கள் தரும்.

3. தென்மேற்கு

தென்மேற்கு பகுதியில் கழிவறை மற்றும் குளியலறை வருவதை தவிர்க்கவும். மேலும் வரும்பட்சத்தில்  உடல் நலனும், முன்னேற்றமும், செல்வமும் கெடும்.

4. மேற்கு

கழிப்பறை தவிர்க்கவும் தனிக் குளியலறை அமைக்க நற்பலன்கள் தரும்.

5. வடமேற்கு

வடக்கு மதிலைத் தொடாமல் கழிவறை மற்றும் குளியலறை அமைக்க நற்பலன்களை தரும்.

6. வடக்கு

கழிப்பறை வருவது கெடுதலான பலனை ஏற்படுத்தும். உடல் நலனும் செல்வமும் கெடும், தனிக்குளியலறை மட்டுமே அமைக்கலாம். அதுவும் வடக்கு மதிலிருந்து நல்ல இடைவெளி விட்டே அமைத்தல் வேண்டும்.

7. வடகிழக்கு

கழிவறை மற்றும் குளியலறை அமைக்க கூடாது.உடல் நலம் கெடும். முன்னேற்றங்கள் அனைத்தும் தடைப்படும். கலகங்களும் கேடுகளும் விளையும். செல்வம் அழியும். குழந்தைகளின் கல்வியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். குடும்பத்தலைவிக்கு கண், நரம்புக் கோளாறுகள் ஏற்படும். மனநிம்மதி கெடும்.

8. கிழக்கு

கழிப்பறை கூடாது. முன்னேற்றமும் உடல்நலனும் கெடும். தனிக்குளியலறை மட்டுமே அமைக்கலாம். அதுவும் கிழக்கு மதிலிலிருந்து நல்ல இடைவெளி விட்டே அமைத்தல் வேண்டும்.