கரணம்
கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவைக் குறிக்கும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும், இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும்.
கரணங்கள்
1. பவம்
2. பாலவம்
3. கௌலவம்
4. தைதுலை
5. கரசை
6. வணிசை
7. பத்திரை
8. சகுனி
9. சதுஷ்பாதம்
10. நாகவம்
11. கிம்ஸ்துக்னம் என 11 வகைப்படும்
அமாவாசையின் மறுநாள் வரக்கூடிய பிரதமையின் பிற்பாதியில் பவகரணம் ஆரம்பமாகும். துவிதியை திதிக்கு பாலவ, கௌலவ கரணங்களும் திருதியை திதிக்கு தைதுலை கரசை கரணங்களும் சதுர்த்தி திதியின் முற்பாதிக்கு வணிசை கரணமும் பஞ்சமி திதிக்கு மீண்டும் பவ, பாலவ கரணமும், இப்படியாக சுழற்சி முறையில் இந்த பவ, பாலவ, கௌலவ, தைதுலை, கரசை, வணிசை, பத்திரை ஆகிய 7கரணங்களும் வந்து கொண்டேயிருக்கும்.
மீதமிருக்கும் நான்கு கரணங்களான சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய கரணங்களில், சகுனி கரணம் தேய்பிறை சதுர்த்தசி திதியின் முற்பாதிக்கும், சதுஷ்பாதம் நாகவம் ஆகிய கரணங்கள் அமாவாசையில் முற்பாதிக்கும் பிற்பாதிக்கும், கிம்ஸ்துக்னம் கரணம் வளர்பிறை பிரதமை திதியின் முற்பாதிக்கும் வரும்.
இந்த நான்கு கரணங்களும் இந்த ஒரு இடத்தில் மட்டுமே வரும், மற்ற 7 கரணங்களைப் போல சுழற்சி முறையில் இவைகள் வராது.
சுப கரணங்கள்:
பவம் ,பாலவம், கௌலவம், தைதுலை,கரசை ஆகியவை சுபகரணங்களாகும்.
அசுப கரணங்கள்:
வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம் , நாகவம் , கிம்ஸ்துக்னம் ஆகியவை அசுபகரணங்களாகும்.