கனவுகளும் அதற்கான பரிகார முறைகளும்

கனவுகளும் அதற்கான பரிகார முறைகளும்

 

பொதுவாக இதுவரையில் என்னென்ன கனவுகள் கண்டால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று பார்த்தோம் அல்லவா? இனி கெட்ட பலன்களைக் காண நேர்ந்தால் என்னென்ன பரிகாரங்களை செய்யலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

 

பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் தொடர்ந்து கனவில் வந்து நம்மை பயமுறுத்தினால் கருடன் மீது இருக்கும் மகாவிஷ்ணுவின் படத்தை வீட்டில் மாட்டி வழிபட்டு வரவும்.

 

வியாதி பீடை தரும் கனவுகளைக் கண்டால் தன்வந்திரி மந்திரத்தை சொல்லி தன்வந்திரியை வணங்கி வர வேண்டும். மாருதி வழிபாடும் நன்மையைத் தரும்.

 

காரியத் தடையைத் தரும் கனவுகளை கண்டாலும், பேய் பிசாசுகளைக் கண்டாலும் விநாயகரை வழிபட்டு வரவும். முடிந்தால் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். விநாயகர் அகவலையும் படிக்கலாம்.

 

கவலைகளை அளிக்கும் இதர கனவுகளைக் கண்டால் தினமும் கோளறு பதிகத்தை படித்து வரவும்.

பண நஷ்டம் தரும் கனவுகளைக் கண்டால் மகாலெட்சுமியை துதிக்க வேண்டும். மேலும் கனகதாரா ஸ்லோகத்தை படிக்க வேண்டும். மாணவர்களின் படிப்பு தடை படும்படியானகனவுகளைக் கண்டால் சரஸ்வதி, ஹயக்ரீவர் மந்திரங்களை சொல்லி வரவும்.

 

ஒரு குறிப்பிட்ட தெய்வம் திரும்பத் திரும்ப நமது கனவில் வந்து கொண்டே இருந்தால் அதற்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தலாம்.

 

கனவில் இறந்த நமது மூதாதையர் அடிக்கடி வந்து அழுவதாகக் கனவு கண்டால். ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட வேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாம் ஸ்லோகத்தை பாராயணம் செய்யவும். சுவாமிக்கு பொங்கல் வைத்தும் திதி" கொடுத்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றலாம்.