வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911
கணவன் – மனைவி பிரிவுக்கு வாஸ்து காரணமா?
கணவன் மனைவி பிரிந்து வாழ்வது எதனால்? அவர்களுக்கு அப்படியொரு சூழ்நிலை ஏற்பட வாஸ்து சாஸ்திரத்தில் அவர்கள் வீட்டு அமைப்பு ஏதேனும் தவறு உண்டா? என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
நமது சமுதாயம் பல நூற்றாண்டுகளாக கூட்டுக்குடும்பமாகவே நாமெல்லாம் இருந்து வந்துள்ளோம். ஆனால் கடந்த 40 முதல் 50 வருடங்களில்தான் இந்த தனிக்குடித்தனம் என்கிற முறை மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. அதேபோல் கடைசி வரைக்கும் வரக்கூடிய உறவில் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவன் மட்டுமே. நீங்கள் எத்தனை வாரிசுகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் அவர்களின் குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட மிக நெருக்கமான உறவானது கணவன் மனைவி உறவு.
ஒரு வீட்டில் உள்ள கணவன் மனைவி பிரிவில் பல வகைகள் உண்டு.
1. வேலைக்காக வெளியூர் போய் விடுதல் மாதம் ஒரு முறை அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருதல் ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தும்.
2. ஆண் பெண் இருவரில் ஒருவர் வேலைக்காக வெளிநாடு சென்று வருட கணக்கில் அங்கேயே தங்கி விடுதல்.
3. கணவனோ மனைவியோ விவாகரத்து கேட்டு கோர்டில் வழக்கு போட்டு வருட கணக்கில் வழக்காடுதல்.
4. கணவன் மனைவி இருவருமே சேர்ந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியாகப் பிரிந்து விடுதல்.
5. சில இடங்களில் கணவனைப் பிரிந்து மனைவி மட்டும் தன்னுடைய தாய் தந்தையுடன் சிறிது காலம் தங்கி விடுதல்.
6. சில சமயம் கணவன் மனைவிக்குள் நிரந்தர பிரிவு ஏற்படுதல். அதாவது இறந்து விடுதல்.
7. குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டுக்கு வந்த மனைவியை திரும்ப கூப்பிடாத கணவர்மார்களும் உண்டு.
நான் மேலே குறிப்பிட்ட இத்தனை பிரிதலுக்கும் நாம் வசிக்கக்கூடிய வீடே காரணம் என்பேன். அப்படிப்பட்ட நமது வீட்டின் தவறான அமைப்புகள்தான் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
1. தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூமை பெட்ரூமாக பயன்படுத்தாமை.
2. தென்மேற்கு பூஜை அறை வருதல் சமையலறை கழிவறை வருதல்.
3. தென்மேற்கு பகுதியில் தலைவாசல் அமைப்பு போர்டிகோ அமைப்பு, கார்பார்க்கிங் அமைப்பு, செப்டிக் டேங்க் அமைப்பு.
4. தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி அமைப்பு.
5. தென்மேற்கு தெருகுத்து 1. தெற்கு 2. மேற்கு என இருபக்கமும் தெருகுத்து வருவது. தென் கிழக்கு கிழக்கு தெருகுத்து வருவது, வடமேற்கு வடக்கு தெருகுத்து வருவது.
6. தென்மேற்கு தெரு பார்வை வருவது.
7. மொத்த இடத்தில் வட கிழக்கு பகுதியில் வீட்டை அமைத்துவிட்டு தென்மேற்கு பகுதி முழுவதும் காலியாக விட்டுவிடுவதும் ஒரு காரணம்.
இதேபோல் இன்னும் சில தவறுகளை என்னால் குறிப்பிட முடியும். உங்களுடைய வாழ்க்கையில் இதுபோல ஏதாவது பிரச்சனை இருக்குமானால் உங்களுடைய கடந்த காலத்தை உற்று நோக்குங்கள். பிரச்சனைக்கான காரணம் புரிய வரும்.
அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் உங்களுடைய வீட்டை சரியாக அமைத்துக் கொண்டு நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழ வாழ்த்துக்கள்.