கடன் சுமை அதிகரிக்க வாஸ்துபடி என்னென்ன காரணம்?
கேள்வி : சார், வணக்கம். நானும், எனது மனைவி இருவருமே அரசு வேலையில் உள்ளோம், எங்களுக்கு நோயின் பிரச்சனை அதிகமாக உள்ளது. அதேபோல் சேமிப்பு என்பது கிடையாது. என்னவென்றே தெரியாமல் கடன் சுமை அதிகரிக்கிறது. ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.
பதில் : சார், வணக்கம். நீங்கள் இருவரும் அரசு வேலை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு வேலை மருத்துவ துறையிலேயோ அல்லது ஆசிரியராகவோ இருக்க வாய்ப்பு அதிகம்.
இனி உங்களது வீட்டமைப்பில் எதுபோல் தவறுகள் இருக்கும் என்பது பற்றி பார்ப்போம்.
1. வடகிழக்கில் சமையலறை இருக்கலாம்.
2. வடக்கு முழுவதும், கிழக்கு முழுவதும் அடைபட்ட வீடாக இருக்கும்.
3. தென்கிழக்கில் போர்டிக்கோ அமைப்பு இருக்கலாம்.
4. தென்கிழக்கில் ளவைழரவ இருக்கலாம்.
5. தென்கிழக்கு தெற்கு வாசலாக இல்லாமல் கிழக்கு வாசலாக இருக்கலாம்.
6. தென்கிழக்கில் கிழக்கு பகுதி, தெற்கு பகுதியில் கிணறு, போர் மற்றும் நீர் நிலைகள் இருக்கலாம்.
7. தென்கிழக்கில் கழிவறை குழி அல்லது கழிவறைகள் இருக்கலாம்.
8. தென்மேற்கில் மாஸ்டர் பெட்ரூமாக பயன்படுத்தாமல் இருப்பது.
9. தென்கிழக்கில் உள்மூலை படி அமைப்பு இருப்பது.
10. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து இருப்பது.
11. கிழக்கு நடுப்பகுதியில் கழிவறை வருவது.
12. தென்மேற்கில் பூஜையறை வருவது.
13. தென்மேற்கில் சமையலறை வருவது.
உங்களுடைய வீடு, உடல், மனம், ஆரோக்கியம் இவற்றுடன் தொடர்புடையது. வாஸ்துபடி வீட்டில் தவறு இருக்கும்போது நோய் ஏற்படும். கடன்சுமை ஏற்படும். மனநலம் கெடும். சிந்தனை, செயல் அனைத்தும் கெடும். 82205-44911