நிறுவனத்தை தொடங்குவது எப்படி?
தனிநபராக ஏற்றுமதி செய்ய முடியாது. நிறுவனமாக பதிவு கொண் டால்தான் ஏற்றுமதியாளருக்கான லைசென்ஸ் கிடைக்கும்.எனவே முதல் வேலை
நிறுவனத்தை பதிவு செய்வதுதான். நாம் என்ன தொழிலில் இறங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதாவது பொருட்களை பிறரிடமிருந்து
வாங்கி ஏற்றுமதி செய்வது, பொருட்களை நாமே உற்பத்தி செய்வது, பிறரிடமிருந்து வாங்கி மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வது இதில்
எந்த வகையில் இறங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை முடிவு செய்து கொண்டு நிறுவனத்திற்கு பொருத்தமான பெயரை
வைக்கலாம்.
நிறுவனப் பெயர்
நமது விருப்பதிற்கு ஏற்ப பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றாலும், இறக்குமதியாளர்கள் புரிந்து கொள் ளும்படி எளிமையாகவும், சர்வதேச
தொழில் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்க வேண்டும். குறிப்பாக நிறுவனத்தின் பெயர் Exports, International , Overseas
என்று முடியுமாறு இருக்க வேண்டும்.