உத்திர நட்சத்திர குணாதிசியங்கள் !!
உத்திரம்
உத்திர நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி
உத்திர நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
உத்திரம் முதல் பாதத்தின் இராசி அதிபதி – சிம்மம் : சூரியன்
உத்திரம் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பாதத்தின் ராசி அதிபதி – கன்னி : புதன்
பொதுவான குணங்கள் :
- இனிமையாக பேசுக்கூடியவர்கள்.
- கல்வியில் நாட்டம் உடையவர்கள்.
- அழகான முக அமைப்பு உடையவர்கள்.
- முன் கோபம் உடையவர்கள்.
- உண்மையை பேசக்கூடியவர்கள்.
- நீராடுவதில் விருப்பம் உடையவர்கள்.
- தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.
- அழகிய நடை உடையவர்கள்.
- பிறருக்கு உதவும் இயல்பு உடையவர்கள்.
- செய்த உதவியை மறவாதவர்கள்.
- வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.
- உடல் நலத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள்.
உத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- இனிமையாக பேசக்கூடியவர்கள்.
- உயர்ந்த குணம் உடையவர்கள்.
- உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
- மனத்தூய்மை உடையவர்கள்.
- தீய குணம் இல்லாதவர்கள்.
- உறவினர்கள் மேல் அன்பு உடையவர்கள்.
உத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- சேமிப்பில் வல்லவர்கள்.
- பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
- கவனக்குறைவால் பொருளை இழப்பவர்கள்.
- பொறுமை இல்லாதவர்கள்.
- அலைபாயும் மனதை உடையவர்கள்.
- சுயநலம் உடையவர்கள்.
உத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- நேர்மையானவர்கள்.
- வெற்றிக்காக எதையும் செய்யக் கூடியவர்கள்.
- கால்நடைகளால் இலாபம் அடைபவர்கள்.
- ஆணவம் கொண்டவர்கள்.
- ஆச்சாரம் உடையவர்கள்.
- தனிமையை விரும்புபவர்கள்.
உத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- இவர்கள் நல்ல உழைப்பாளிகள்.
- செய்த உதவியை மறக்காதவர்கள்.
- மற்றவர்களை மதிக்கக்கூடியவர்கள்.
- பெருந்தன்மையான குணம் உடையவர்கள்.