உத்தராயனம் மற்றும் தட்சிணாயனம்

உத்தராயனம் மற்றும் தட்சிணாயனம்

 

அயனம் என்றால் பயணம் என்று பொருளாகும். சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆண்டு இரண்டு பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவை 1. உத்தராயனம் 2. தட்சிணாயனம் ஆகும்.

 

1. உத்தராயனம்

உத்தர் என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயனம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மற்றும் ஆனி ஆகிய ஆறு மாதங்கள், உத்தராயன காலமாகும். நம்முடைய இந்த ஆறு மாத காலமானது தேவர்களுக்கு ஒரு பகல் பொழுதாகும்.

2. தட்சிணாயனம்

தட்சண் என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செய்யும் காலமே தட்சிணாயன காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி மாதம் 1ஆம் தேதியன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறுமாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோயில்களில் பஜனை பாடி தேவர்களை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

உத்தராயனமும் தட்சிணாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை மாதமானது மகர ராசிக்குரிய மாதமாகும். சூரிய பகவான் உத்தராயன காலம் ஆரம்பிக்கும் நாளான தை 1ஆம் தேதியன்று மகர ராசியில் நுழைகிறார். எனவே உத்தராயன கால ஆரம்பம் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.