உங்கள் கண்கள் அழகு பெற வேண்டுமா?
- கண்கள் பொலிவு பெற மற்றும் கண் பார்வை வளம் பெற தக்காளிப்பழத்தை வேக வைக்காமல் பச்சையாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- திராட்சை பழம் கண்களுக்கு ஊட்டம் தருகிறது.
- கண்கள் பளபளக்கவும், பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணை ஒன்று அல்லது இரண்டு சொட்டு விட்டு வர வேண்டும்.
- இரண்டு சொட்டு தூய்மையான தேங்காய் எண்ணெய்யை வாரம் ஒரு முறை கண்களில் விட்டு வர கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும்.
- பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பேக் போட்டு வருவதால் கண்ணின் கருவளையம் நீங்கி அழகாகும்.
- வெள்ளரிக்காயை அறைத்தோ அல்லது வட்டவடிவில் நறுக்கியோ கண்களின் மீதும், கண்களை சுற்றி பேக் போட்டும் வர கண்ணிற்கு குளிர்ச்சியும் பிரகாசமும் கிடைக்கும்.
- திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வந்தாலும் கண் பார்வை நன்றாக இருக்கும்.
- கண்களை தினமும் பன்னீரால் துடைத்து வர கண்கள் புதுப்பொலிவு பெறும்.
- வாரம் இருமுறை இரவில் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணையை கண்களில் விட்டு வந்தாலும் கண்கள் குளிர்சிபெரும்.
- வெண்ணையுடன் கொத்தமல்லி சாறை கலந்து கண்களுக்கு பேக் போடா கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.
- பாதாம் பருப்புகளை வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.
- கண்கள் நலமாக இருக்க காரட், பொன்னாங்கண்ணி, திராட்சை , பப்பாளி , பேரீட்சை, சாத்துக்குடி, வெள்ளரி, இளநீர், ஆவாரம்பூ , நெல்லிக்காய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- ஆப்பிள் பழத்தை நறுக்கி சுத்தமான தேனில் நனைத்து சில வாரங்கள் சாப்பிட்டு வர கண்கள் அழகு பெறும். சிறந்த ஒளி பெறும்.
- திருநீற்று பச்சிலையைச் சாற்றில் சங்கைநன்றாக உறைத்து பூசினால் கண் கட்டி குறையும்.
- கண்களுக்கு ஒளி பெருக தான்றிக்காய் பொடி 14 ஸ்பூன் அளவு தேனில் கலந்து காலையில் சாப்பிட்டு வர வேண்டும்.