இயற்கைக்கு மாறான வாஸ்து அமைப்புகளும் அதன் தீமைகளும்
இந்த பிரபஞ்சம் அதி அற்புதமான பல அதிசயங்களை உள்ளடக்கியது. அதை தெரிந்துக்கொண்டு நாம் இயற்கையோடு வாழும்போது பல அதிசயங்கள் நமது வாழ்வில் நடைபெறுகிறது. அதே இயற்கைக்கு மாறாக வாழ முற்படும்போது பல துன்பங்களை மனிதர்களாகிய நாம் அனுபவிக்க நேரிடுகிறது.
இயற்கைக்கு ஏற்ற அமைப்புகள் :
- நாம் குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கில் எப்பொழுதும் நல்ல திறந்த வெளியாக இருப்பது சிறப்பு.
- நல்ல காற்றோட்டமாக இருப்பது சிறப்பு.
- நல்ல சூரிய ஒளிக்கதிர் வரும்படியான அமைப்புடன் இருப்பது சிறப்பு.
- தரைதளம் முதல் தளம் இரண்டுமே சமதளமாக இருப்பது சிறப்பு.
- வடகிழக்கு வரவேற்பறையாக அமைப்பது சிறப்பு.
- வடகிழக்கை குழந்தைகள் படிக்கும் அறையாக அமைப்பதும் சிறப்பு.
- வடகிழக்கு உச்சத்தில் வாசல் ஜன்னல் அமைப்புகள் வருவது சிறப்பு.
- தரைக்கு கீழ் தண்ணீர் தொடர்பான அமைப்புகள் வருவது சிறப்பு.
இயற்கைக்கு மாறான அமைப்புகள் மாறும் போது ஏற்படும் விளைவுகள் :
வடகிழக்கில் சூரிய ஒளி வரமுடியாத வீடாக இருக்குமானால் மனநலம் தொடர்பான பிரச்சனை முதல் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகள் வரக்கூடும்.
வடகிழக்கில் நீருக்கு பதிலாக நெருப்பை வைக்கும்போது அந்த வீட்டில் உள்ளவர்களின் வாழ்வில் எந்நேரமும் கலகங்கள் தான் நிகழும், ஆண்கள், வீட்டின் மூத்த வாரிசு வீட்டை விட்டு வெளியேற நேரிடும்
வடகிழக்கில் குடிநீருக்கான அமைப்புக்கு பதிலாக கழிவறை அமைப்புகள் வரும்போது அந்த வீட்டில் உள்ளவர்களின் உடல் அமைப்பில் இரத்த நாளங்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
வடகிழக்கில் காற்றோட்டம் இல்லாத அமைப்பு என்றால் அந்த வீட்டில் உள்ளவர்கள் அதீத மூடநம்பிக்கையில் சிக்கி கொள்கிறார்கள்.
வடகிழக்கை வரவேற்பறையாக பயன்படுத்த முடியாதபோது அங்கு
கடன், வறுமை,
உறவுகளில் விரிசல் ,
கணவன் – மனைவி உறவில் விரிசல் ,
குழந்தையின்மை ,
நிரந்தர வேலையின்மை ,
போதைக்கு அடிமையாதல் ,
தந்தை மகன் அல்லது தந்தை மகள் உறவில் விரிசல் ,
மூத்த மருமகனுக்கு வேலையில்லாத நிலை ,
வீட்டில் பெண்கள் ஆளுமை ,
காலம் காலமாக பெண் சொத்தாக மாறிவிடுதல்,
பெண்கள் மட்டும் அதிகமாகி ஆண் பிறப்பு அரிதாகி விடுவது போன்றவைகள் நிகழக்கூடும். 82205-44911