அவல் பணியாரம் செய்வது எப்படி

அவல் பணியாரம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் :

பச்சரிசி – 1 கப்

அவல் – 1 கப்

வெல்லம் (பொடித்தது) – 1 கப்

சோடா உப்பு – 1/2 ஸ்பூன்

நெய் – 50 கிராம்

எண்ணெய் – 50 கிராம்

 

செய்முறை :

பச்சரிசி மற்றும் அவலை நன்றாக கழுவி 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஊறிய பின் தண்ணீரை வடித்து விட்டு பச்சரிசி மற்றும் அவலை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.

பாதி அரைத்ததும் வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.                                அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோடா உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். இனிப்பு இன்னும் தேவையென்றால் 2 மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

நெய் மற்றும் எண்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் பணியார கடாயை வைத்து கலந்து வைத்திருக்கும் நெய் மற்றும் எண்ணெயை ஒரு மேஜைக்கரண்டி எடுத்து ஒவ்வொரு குழிக்கும் ஊற்றவும்.

நன்றாக சூடானதும் மாவை எடுத்து அனைத்து குழிகளிலும் ஊற்றி      மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து ஒரு சிறிய கம்பி அல்லது ஸ்பூனால் மாற்றி போடவும்.

இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள   மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான அவல் பணியாரம் ரெடி.