அருமையான வரிகள்
- தெரிந்து மிதித்தாலும் ,தெரியாமல் மிதித்தாலும், மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
- நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை, அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை.
- சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது, உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை.
- நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்.
- பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல.ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல.
- பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க,உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா? கடன் கேளுங்க.
- பிச்சை போடுவது கூட சுயநலமே,புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்.
- அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை, ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
- வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு,அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்.
- வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் – மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
- திருமணம் – ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்,ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.
- முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
- நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
- இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட, வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்.
- பகலில் தூக்கம் வந்தால்,உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்.இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்.
- தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..
படித்ததில் பிடித்தது..,